/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
/
கம்பம் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
கம்பம் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
கம்பம் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
ADDED : டிச 28, 2024 07:02 AM
கம்பம் : கிராமங்களில் பூட்டியிருந்த வீடுகளில் திருடிய 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகள், பாத்திரங்கள் தொடர்ந்து திருடுபோனது. கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை செய்து அணைப்பட்டியை சேர்ந்த இந்திர குமார் 40, கம்பம் பிரவின்குமார் 38, நாராயணத்தேவன்பட்டி சங்கீதா 42 ஆகிய 3 பேர்களை கைது தெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.86 ஆயிரம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், பித்தளை பாத்திரங்கள், திருடுவதற்கு பயன்படுத்திய இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர்களையும் ராயப்பன் பட்டி போலீசார் உத்தமபாளையும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.