/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தகராறில் விரல் துண்டான வழக்கில் 3 பேர் கைது
/
தகராறில் விரல் துண்டான வழக்கில் 3 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2025 12:44 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 43. அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார். கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்.
இவரது நண்பர்களுடன் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் மது குடித்தனர். இதனை பெருமாள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இந்த முன் விரோதத்தால் பஞ்சர் கடைக்கு வந்த ராஜ்குமார் இவரது நண்பர்கள் தங்கதமிழ்செல்வன், செல்வக்குமார், அன்பு ஆகியோர் பெருமாளை அடித்தனர். ராஜ்குமார் அரிவாளால் பெருமாளை வெட்டினார். தடுத்த பெருமாள் கை விரல் ஒன்று துண்டானது. தடுக்க வந்த பெருமாள் மருமகன் தமிழ்செல்வனுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், தங்கதமிழ்செல்வன், செல்வக்குமார்,அன்பு ஆகியோரை கைது செய்து, ராஜ்குமாரை தேடி வருகிறார்.-