/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
3 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது
/
3 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது
UPDATED : ஆக 21, 2025 08:43 AM
ADDED : ஆக 20, 2025 11:10 PM
கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே தாழையூத்து பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக எஸ்.ஐ., அமாவாசை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். டூவீலரில் சென்ற இருவர் அப்பகுதி தென்னந்தோப்பு அருகே நின்ற இருவரிடம் தாங்கள் கொண்டு சென்ற பையை வழங்கினர். அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் டூவீலரில் கஞ்சாவுடன் சென்றவர்கள் கடமலைக்குண்டு முருகானந்தம் 51, ஆத்தங்கரைபட்டி சிதம்பரநாதன் 32, என்பதும், இவர்களிடம் பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பெற்ற எழுமலை பவுன்பாண்டி 33, லீலா 50, என தெரிய வந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை கைப்பற்றினர்.