/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆறுகளில் விடப்பட்ட 3 லட்சம் மீன் குஞ்சுகள்
/
ஆறுகளில் விடப்பட்ட 3 லட்சம் மீன் குஞ்சுகள்
ADDED : செப் 27, 2025 04:44 AM
தேனி: மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில்2025--2026 கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பை உறுதிப்படுத்தும் களப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் நாட்டின மீன்வகை சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை அரசு மீன் பண்ணையில் வளர்க்கப்பட்டன. இந்த மீன் குஞ்சுகள் வைகை ஆற்றில் 60 ஆயிரம், சுருளியாறு ஆற்றில் 2.40 லட்சம் மீன்விரலிகள் ஆற்றில் விடப்பட்டுள்ளன.
வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மீன்குஞ்சுகளை விட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.நிகழ்வில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சவுந்திரபாண்டியன், மீனவர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், தேனி மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்மீன்வளத் துறையின் அலைகள்திட்டம் சார்பில், மீனவ மகளிர் குழுவிற்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 5 குழுக்களுக்கு ரூ.1.25 லட்சம் நுண் கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.