/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் முன் எச்சரிக்கையாக 30 பேர் கைது
/
தேனியில் முன் எச்சரிக்கையாக 30 பேர் கைது
ADDED : பிப் 04, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க, ஹிந்து முன்னணி ஆர்பாட்டம் இன்று திருப்பரங்குன்றத்தில் நடத்தப்படும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.
இதற்கு பா.ஜ., உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்க இருந்தனர். தேனி மாவட்டத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு செல்வதை தடுக்கும் வகையில் பா.ஜ, மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், ஹிந்து எழுச்சிமுன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், சிவசேனா மாநில துணைத் தலைவர் குரு அய்யப்பன் உள்பட 30 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

