ADDED : ஆக 21, 2026 06:35 PM
தேனி, ஆக. 22–‘சர்வர் ’பிரச்னையை கண்டித்து விற்பனையாளர்கள் பி.ஓ.,எஸ்., கருவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் 300 ரேஷன் கடைகள் செயல்படவில்லை.
தமிழகத்தில் ஆக., துவக்கம் முதல் ரேஷன் கடைகளில் சர்வர் சரிவர இயங்கவில்லை. இதனால் பொருட்கள் வினியோகம் பாதித்து பொதுமக்கள் ரேஷன் விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்தும், விற்பனை முனைய கருவிகளை(பி.ஓ.,எஸ்.,) நேற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். சர்வர் பிரச்னை சரிசெய்ய கோரி தாலுகா அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 517 ரேஷன் கடைகளில் சுமார் 300 ரேஷன் கடைகளில் நேற்று பொருட்கள் வினியோகம் நடைபெறவில்லை. தேனி தாலுகா அலுவலகத்தில் சங்க மாநில நிர்வாகி பாண்டி தலைமையில் மனு அளித்தனர். நிர்வாகிள் மருது, நாகேந்திரன், பிருந்தா, சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
