ADDED : அக் 25, 2024 05:48 AM

தேனி: மாவட்டத்தில் பெய்த மழையால் இதுவரை 32 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதில் இம்மாத துவக்கத்தில் இருந்து நேற்று வரை 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ. 4ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஆண்டிபட்டி தாலுகாவில் ஒரு பெண் பலியானார். ஒரு கால்நடையும் கனமழையினால் உயிரிழந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி 33 மி.மீ., அரண்மனைப்புதுார் 30.6 மி.மீ., வீரபாண்டி 36.2 மி.மீ., பெரியகுளம் 50.2மி.மீ., மஞ்சளாறு 24 மி.மீ., சோத்துப்பாறை 54 மி.மீ., வைகை அணை 23.2 மி.மீ., போடி 13.2 மி.மீ., உத்தமபாளையம் 15.2 மி.மீ., கூடலுார் 18.4 மி.மீ., பெரியாறு அணை 12 மி.மீ., தேக்கடி 14 மி.மீ., சண்முகநதி அணை 41.6 மி.மீ., என 365.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.