/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதாரை வங்கியில் இணைக்காத 3211 விவசாயிகளுக்கு உதவி தொகை நிறுத்தம்
/
ஆதாரை வங்கியில் இணைக்காத 3211 விவசாயிகளுக்கு உதவி தொகை நிறுத்தம்
ஆதாரை வங்கியில் இணைக்காத 3211 விவசாயிகளுக்கு உதவி தொகை நிறுத்தம்
ஆதாரை வங்கியில் இணைக்காத 3211 விவசாயிகளுக்கு உதவி தொகை நிறுத்தம்
ADDED : செப் 27, 2024 07:37 AM
தேனி: மாவட்டத்தில் ஆதார் விபரங்களை வங்கி கணக்குடன் இணைக்காததால் 3211 விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கான பிரதமரின் கவுரவ உதவித்தொகை திட்டத்தில் ஆண்டிற்கு 3 தவணைகளாக ரூ. 6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முதல் தவணை வழங்கும் போது 44ஆயிரம் விவசாயிகள் பலனடைந்தனர். பின் இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், ரூ.10ஆயிரத்திற்கு மேல் மாத ஓய்வூதியம் பெறுவோர், ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர், வரி செலுத்துபவர்கள் என பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது 24ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயனடைகின்றனர்.
இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் ஆதார் விபரங்களை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும். ஆனால், ஆண்டிபட்டி 579, கடமலைகுண்டு, மயிலாடும்பாறை 661, போடி 303, பெரியகுளம் 730, தேனி 301, சின்னமனுார் 345, உத்தமபாளையம் 168, கம்பம் 124 பேர் என 3211 விவசாயிகள் ஆதார் விபரங்களை வங்கியில் இணைக்காமல் உள்ளனர்.
இதனால் இவர்களுக்கு பிரதமரின் கவுரவ உதவித்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கிற்கு தொகை வராத விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள், இசேவை மையங்கள் மூலம் ஆதார் விபரங்களை இணைத்து பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.