ADDED : ஜூலை 23, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் பகுதி ரேஷன் கடைகளில் சில விற்பனையாளர்கள் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தல் ஜோராக நடக்கிறது. கேரளாவிற்கு டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
நேற்று தென்கரை பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை அருகே உள்ள பிச்சை சந்தில் பெரியகுளம் இந்திராபுரித்தெருவைச் சேர்ந்த வேல்முருகன் 36, என்பவர் டூவீலரில் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றி சென்று லாரியில் கடத்துவதற்கு கொண்டு சென்றார்.
அப்போது உத்தம பாளையம் உணவு பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு எஸ்.ஐ., லதா மற்றும் போலீசார் வேல் முருகனை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினார்.
இவர் கடத்தி சென்ற 34 மூடைகளில் 1700 கிலோ ரேஷன் அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் கைப்பற்றப்பட்டது. இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.