ADDED : ஆக 27, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
28–
மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளிவருகின்றனர். இவர்கள் பலர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவிட்டார். தேனி போலீஸ் ஸ்டேஷனில் 7 பேர், போடியில் 4 பேர், சின்னமனுாரில் 2 பேர், கம்பம் வடக்கில் 9 பேர், பெரியகுளத்தில் 3 பேர், தேவதானப்பட்டி, கம்பம் தெற்கு தலா 2 பேர், ஓடைப்பட்டியில் ஒருவர், வீரபாண்டியில் 4 பேர், வருஷநாடு, பழனிசெட்டிபட்டியில் தலா 2 பேர் என மொத்தம் 37 மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்கள் தாமாத முன்வந்து விசாரணைக்கு ஆஜராக எஸ்.பி., உத்தரவிட்டார்.
