/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி 3வது சனிவார திருவிழா
/
குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி 3வது சனிவார திருவிழா
குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி 3வது சனிவார திருவிழா
குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி 3வது சனிவார திருவிழா
ADDED : ஆக 03, 2025 02:51 AM

சின்னமனுார்:தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வர பகவான் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாவது வாரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குச்சனுாரில் பிரசித்திபெற்ற சுயம்புவாக உருவான சனி பகவான் கோயில் உள்ளது. இங்கு ஆடி சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமை பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். கோயில் திருப்பணி நடைபெறுவதால் 2 ஆண்டுகளாக அதிகார பூர்வ திருவிழா நடைபெறவில்லை.
இருப்பினும் நேற்று முன்தினம் சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். கோயிலிற்கு முன்பு ஒடும் சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுதல், எள்ளு, உப்பு சாத்துதல் போன்ற நேர்த்திகடன்களை நிறைவேற்றி, தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சுவாமிக்கும், அம்மனுக்கும் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆக. 11 ல் கருப்பண சுவாமிக்கு மது பாட்டில் படையல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் 2 கி.மீ. தூரம் வரை நின்றன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேனி, சின்னமனூர், கம்பம், போடி போன்ற ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

