/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு விற்க கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
/
மாணவர்களுக்கு விற்க கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : நவ 11, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வயல்பட்டி, கொடுவிலார்பட்டி பகுதியில் வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கொடுவிலார்பட்டி அரசு பள்ளி அருகில் நின்றிருந்த வருஷநாடு சிங்ராஜபுரம் கணேசன் 23, தர்மராஜபுரம் ரஞ்சித்குமார் 29, அரண்மணைப்புதுார் தங்கப்பாண்டி 34, வயல்பட்டி பிரபாகரன் 26 ஆகியோரை விசாரித்தனர். அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.
நால்வரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.