/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோ மீது வாகனம் மோதி 4 பேர் காயம்
/
ஆட்டோ மீது வாகனம் மோதி 4 பேர் காயம்
ADDED : பிப் 04, 2025 05:42 AM
தேவதானப்பட்டி: தேவதானபட்டியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் பிரபு 30. இவரது மனைவி ஹேமலதா 25. மகன் மோஹித் 7. உறவினர்கள் ஈஸ்வரி 65. சபரி 25 ஆகியோர் ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 50. வீட்டு விசேஷத்திற்கு ஆட்டோவில் தேவதானப்பட்டியிலிருந்து ஜெயமங்கலம் சென்றனர். ஆட்டோவை எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மதன் 30, ஓட்டினார்.
ஜெயமங்கலம் சில்வார்பட்டி ரோடு வாய்க்கால் அருகே செல்லும் போது எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த ஹேமலதா உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் மோஹித், ஈஸ்வரி மதுரை அரசு மருத்துவமனைக்கும் மற்றவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜெயமங்கலம் போலீசார் சிசிடிவி கேமரா மூலம் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.