/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
30 அடி பள்ளத்தில் விழுந்து கார் தீப்பற்றி 4 பேர் காயம்
/
30 அடி பள்ளத்தில் விழுந்து கார் தீப்பற்றி 4 பேர் காயம்
30 அடி பள்ளத்தில் விழுந்து கார் தீப்பற்றி 4 பேர் காயம்
30 அடி பள்ளத்தில் விழுந்து கார் தீப்பற்றி 4 பேர் காயம்
ADDED : ஏப் 14, 2025 12:22 AM

போடி; போடிமெட்டு அருகே 30 அடி பள்ளத்தில் விழுந்த கார் தீப்பற்றியதில், அதில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரூ, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார், 44. அவரது மனைவி நித்யா, 35. மகன்கள் ஜோஸ்வா, 13, ஜோயல், 11. இவர்கள் நால்வரும் நேற்று காரில், போடிமெட்டு வழியாக கேரளா சென்று கொண்டிருந்தனர்.
பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்று, வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. இதில், கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது.
கேரளா போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில், கிஷோர் குமார், நித்யாவிற்கு லேசான காயமும், ஜோஸ்வா, ஜோயல் பலத்த காயமும் அடைந்தனர்.
இவர்கள், சிசிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.