UPDATED : செப் 24, 2026 05:25 PM
ADDED : செப் 24, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு அருகே எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி சீல்நாயக்கன் சோலை ஓடையில் ஒரு கும்பல் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில் டிராக்டர் டிரைவர் மூலக்கடையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் 24, அதே ஊரைச் சேர்ந்த தர்மதுரை 48, பால்பாண்டி 52, காசிராஜன் 63, என்பதும் தெரிய வந்தது. 4 பேரையும் கைது செய்து ஒரு யூனிட் ஓடை மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். டிராக்டர் உரிமையாளர் முத்தாலம்பாறையைச் சேர்ந்த பார்த்திபனை தேடி வருகின்றனர்.
