ADDED : செப் 24, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
போடி, செப்.
25 -
போடி மேலத்தெருவில் வசிப்பவர் சேட். இரட்டை வாய்க்கால் அருகே இலவம்பஞ்சு பேட்டை உள்ளது. இங்கு உள்ள அறையில் 200 மேற்பட்ட இலவம் கொட்டை பஞ்சு, அரைத்த சுத்தமான பஞ்சு மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் மாலை பேட்டையில் பணிகள் முடிந்து பணியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அறையில் இருந்த இலவம் பஞ்சு மூடைகள் எரிந்து சேதமானது. போடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
