ADDED : செப் 24, 2026 04:30 PM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டாஸ்மாக் கடை பூட்டிய நேரத்தில், தென்னந் தோப்பில் தனியார் டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்திய திலகர் ராஜா 45. முருகனை 50. போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி கோட்டையன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திலகர் ராஜா. இவரது நண்பர் டி. காமக்காப்பட்டி மாயாண்டி தெருவை சேர்ந்தவர் முருகன். இருவரும் தேவதானப்பட்டி முருகமலை ரோடு டாஸ்மாக் கடை பூட்டிய நேரத்தில், அருகேயுள்ள திலகர் ராஜா தென்னந்தோப்பில் விற்பனைக்கு வைத்திருந்த 63 மது பாட்டில்கள், அரசு அனுமதியின்றி மதுபார் அமைத்து, மது குடிப்பவர்களுக்கு சமையல் செய்வதற்கு வைத்திருந்த சிலிண்டர்கள் 2, தின்பண்டங்கள் வைத்திருந்தனர். இவற்றை தேவதானப்பட்டி எஸ்.ஐ., நாகராஜன் தலைமையில் போலீசார், திலகர் ராஜா, முருகனை கைது செய்தனர். அங்கிருந்த மது பாட்டில்கள், சிலிண்டர்கள், விற்பனை செய்த ரூ.ஆயிரம், ஒரு அலைபேசியை கைப்பற்றினர்.
