/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொலை செய்த மனைவி
/
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொலை செய்த மனைவி
ADDED : டிச 11, 2024 07:17 AM

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரியகுளம் அருகே எழுவனம்பட்டி பால் வியாபாரி ராமன் 50. இவரது மனைவி சந்தனசெல்வி 43. இவர்களுக்கு இரு பெண், இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ராமனிடம் செங்குளத்துப்பட்டி சுரேஷ் 35, வேலை செய்தார். சந்தனசெல்விக்கும், சுரேஷிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை ராமன் கண்டித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராமனை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர்.
சந்தனசெல்வி தூண்டுதலில் 2016 டிச.,6ல் அதிகாலை 2:00 மணிக்கு டூவீலரில் பால் வாங்க சென்ற ராமனை எழுவனம்பட்டி கண்மாய் அருகே வழிமறித்து சுரேஷ், அவரது நண்பர்கள் கொடைக்கானல் பள்ளங்கி பாண்டி 44, சாத்தாகோவில்பட்டி செல்லத்துரை 54, ஆகியோர் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பலியானார்.
தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து சுரேஷ், சந்தனசெல்வி உட்பட 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி சமீனா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிவக்குமார் ஆஜரானார்.
--