ADDED : மே 27, 2025 04:32 AM

போடி : போடி ஜே.கே.,பட்டி கீரைக் கடை வீதியை சேர்ந்த விவேகானந்தன் மகன் ஆகாஷ் குமார் 22. கேட்டரிங் படித்துள்ளார்.
இதே பகுதியை சேர்ந்த விவசாாயி முனியாண்டி மகன் பாண்டீஸ்வரன் 25. இருவரும் ஒரே டூவீலரில் நேற்று மாலை பிச்சாங்கரை மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். ஆகாஷ்குமார் டூவீலரை ஓட்டினார். (ஹெல்மெட் அணியவில்லை).
பிச்சாங்கரை ரோட்டில் இடஞ்சல் பாறை அருகே நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் டூவீலருடன் விழுந்தனர்.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பாப்பநாயக்கன்பட்டி முனியாண்டி மகன் கார்த்திக் 22. நமச்சிவாயம் மகன் ஹேமந்தராஜ் 18. இருவரும் கூலித்தொழிலாளிகள்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டி.கல்லுப்பட்டிக்கு உணவு வாங்க டூவீலரில் திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் சோலைப்பட்டி விலக்கு அருகே சென்றனர்.
அப்போது செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் டூவீலர் மீது மோதியதில் இருவரும் இறந்தனர்.
டிரைவர் தென்காசி குழந்தை இயேசு மீது வழக்குப்பதிவு செய்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.