sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாமூல் கேட்ட 4 பேர் கைது

/

மாமூல் கேட்ட 4 பேர் கைது

மாமூல் கேட்ட 4 பேர் கைது

மாமூல் கேட்ட 4 பேர் கைது


ADDED : அக் 26, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி தேவாரம் மெயின் ரோடு பாலாஜி நகரில் வசிப்பவர் புருஷோத்தமன் 36. இவர் சிலமலை அருகே சேட்காடு பகுதியில் சொந்த இடத்தில் அனுமதி பெற்று 4 ஆண்டுகளாக கல் குவாரி நடத்தி வருகிறார்.

கல் குவாரியில் இருந்து உடை கற்களை ஏற்றி சென்ற 2 டிப்பர் லாரிகளை முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த மதன் 32., பிரதீப் 29, அருண்குமார் 32, விஜி 29, பிரதீஸ் ஆகிய 5 பேரும் சேர்ந்து வழி மறித்து உள்ளனர்.

அதன் பின் டிப்பர் லாரி டிரைவர்களை தகாத வார்த்தையால் பேசி அடித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு குவாரி உரிமையாளர் புருஷோத்தமன், மேலாளர் மணி சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த பிரதிப், மதன் உட்பட 5 பேரும் சேர்ந்து புருேஷாத்தமனை தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். அதன்பின் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

புருஷோத்தமன் புகாரில் மதன், பிரதீப், உட்பட 4 பேரையும் போடி தாலுாகா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய பிரதீசைதேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us