/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குட்கா வழக்கில் சிக்கியவரை விடுவிக்க லஞ்சம் பெற்ற புகார் எஸ்.ஐ.,க்கள் 4 பேர் சிவகங்கைக்கு மாற்றம்

ADDED : நவ 24, 2024 02:26 AM
தேனி:தேனி குடோனில் குட்கா கைப்பற்றிய வழக்கில் சிக்கியவரை விடுவிக்க போலீசார் லஞ்சம் பெற்ற புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ.,க்கள் 4 பேர், ஒரு ஏட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர்.
தேனி சுப்பன்செட்டி தெருவில் ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ புகையிலை பொருட்களை டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் பழனிசெட்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வாழையாத்துப்பட்டி நாகராஜ் 55, அரண்மனைப்புதுார் பாண்டி 65, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அமர்சிங் 33 ஆகியோரை அக்.,15 ல் கைது செய்தனர். இதில் சிக்கிய ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்றதாக எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் சென்றது.
விசாரணைக்குப்பின் பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., ஜெகன் என்ற கோவிந்தராஜ், குற்றதடுப்பு பிரிவு எஸ்.ஐ.,க்கள் சம்சுதீன், மகேஸ்வரன், செல்லையா, ஏட்டு கவாஸ்கரை தேனி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கினை சரியாக விசாரிக்காத விசாரணை அதிகாரி எஸ்.ஐ., இதிரிஸ்கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கள், ஏட்டு ஆகிய 5 பேரை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹாவிற்கு எஸ்.பி., பரிந்துரை செய்தார்.
ஜெகன், சம்சுதீன், மகேஸ்வரன், செல்லையா, கவாஸ்கர் சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்விவகாரத்தில் பழனிசெட்டிபட்டி தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல் தேனி டிராபிக்கிற்கு மாற்றப்பட்டார்.