/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 சகோதரிகள் நிலப் பிரச்னைக்கு தீர்வு காண கோரி மனு

ADDED : அக் 29, 2024 05:47 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, குடும்ப சொத்து பிரச்னையில் தீர்வு வழங்க கோரி பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பூபதி 57, இவரது சகோதரிகள் அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 52, கெங்குவார்பட்டி லட்சுமி 52, செம்பட்டி கண்ணாமணி 55 ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்த தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்து, கலெக்டரிடம் மனு வழங்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நுழைவு வாயில் மரத்தடியில் நின்றிருந்த பூபதி, நாகலட்சுமி, கண்ணாமணி, லட்சுமி ஆகியோர் திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
சகோதரிகள் நான்கு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களது மனுவில், 'எங்களுக்கும், சகோதரர் மணிக்கு இடையே நிலப்பிரச்னை உள்ளது.
இது தொடர்பான புகாரை பெரியகுளம் தாசில்தார், ஆர்.டி.ஓ., விசாரிக்க வில்லை. நிலப்பிரச்னைக்கு தீர்வு காணவும், முழுமையாக விசாரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.