ADDED : நவ 22, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டம் தொடுபுழா பெரும்பிள்ளிசிரா பகுதியில், தொடுபுழா எஸ்.ஐ. ரோயி தலைமையில் போலீசார் ரோந்து பணியின் போது அப்பகுதியில் நின்ற காரை நோக்கி சென்றனர். காரில் இருந்த மூவரில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருவர் சிக்கினர்.
விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நவுபல் 25, ரின்ஷாத் 29, என தெரியவந்தது. காரை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து 40 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்தனர்.அப்பகுதியில் பள்ளி, கல்லூரி ஆகியவை உள்ளன. மாணவர்களிடம் விற்பனை செய்ய கஞ்சா கொண்டு வந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கைதான இருவரும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.