தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/403 லி., தடை செய்யப்பட்ட களை கொல்லிகள் பறிமுதல்

403 லி., தடை செய்யப்பட்ட களை கொல்லிகள் பறிமுதல்

403 லி., தடை செய்யப்பட்ட களை கொல்லிகள் பறிமுதல்


UPDATED : நவ 25, 2026 05:00 PM

ADDED : நவ 25, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:00 PM ADDED : நவ 25, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தடை செய்யப்பட்ட களை கொல்லிகள் 403 லி., பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாராகுவாட் பை குளோரைடு களை கொல்லி பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் இறக்குமதி, உற்பத்தி, விற்பனைக்கு தேனி மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு மாற்று மருந்து இல்லாதது தடைக்கு முக்கிய காரணமாகும். இந்த மருந்து நெல், கரும்பு, பயறு வகை, எண்ணெய் வித்து பயிர்களில் களைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தெளிக்கும் போது உடல் நல கோளாறு ஏற்படும். பாராகுவாட் டை குளோரைடு 7.5 சதவிகிதம், கிளைபோசட் 30 சதவீதம், எஸ்.சி., பாராகுவாட் டை குளோரைடு 24 சதவிகிதம், 22.4 சதவீதம், ஆக்ஸிபுளோரோபென் 5 சதவிகிதம், 1.99 சதவிகிதம் வேதி பொருட்கள் உள்ள 4 மருந்துகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இவற்றை பயன்படுத்தக்கூடாது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வில் 430 லி., தடை செய்யப்பட்ட களை கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. வரும் நாட்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிகையுடன், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us