UPDATED : நவ 19, 2026 04:24 PM
ADDED : நவ 19, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.
முகாமில் ஒரு பகுதியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கொண்ட குழு ஆண்டிபட்டியில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பல்வேறு கடைகளில் இருந்த 42 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 8 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.
