ADDED : அக் 13, 2024 05:28 AM
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெரியகுளத்தில் 43 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பகலில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்குமேல் தேனி நகர்பகுதி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 43 மி.மீ., பதிவான. இதில் அரண்மைனைப்புதுார் 4.2, வைகை அணை 21.8, மஞ்சளாறு அணையில் 26 மி.மீ., சோத்துப்பாறையில் 32 மி.மீ., வீரபாண்டியில் 9.8 மி.மீ., போடியில் 8.2 மி.மீ., ஆண்டிபட்டி 3, கூடலுார் 3, உத்தமபாளையம், பெரியாறு அணை தலா 5.6, தேக்கடி 4.2, சண்முகாநதி 6.4 என மாவட்டத்தில் 181.4 மி.மீ., மழை பதிவானது.ேற்று தேனி நகர்பகுதியில் பகல் நேரத்தில் சாரல் மழை பெய்ய துவங்கியது. இதனால் கடைவீதி, பஜார் பகுதிகளுக்கு வந்தவர்கள் நனைந்தவாறு சென்றனர்.