/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
4 ஆண்டுகளில் 4.44 லட்சம் கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல் ரூ.98.36 கோடி அபராதம் வசூல் ரூ.98.36 கோடி அபராதம் வசூல்

ADDED : நவ 07, 2025 01:58 AM
தேனி: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் 4.44 லட்சம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்தவர்களிடம் ரூ. 98.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக உணவுப்பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பினர், போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறையினர் இணைந்து ஆய்வு செய்து விற்பனையை தடுக்கின்றனர்.
இதுபற்றி உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'தமிழகத்தில் 2021 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை 19.49 லட்சம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 46,590 ஆய்வுகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் என 4.44லட்சம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விற்பனை செய்த 41 ஆயிரம் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.98.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த குட்கா பொருட்களில் 1.84 லட்சம் கிலோ இதுவரை அழிக்கப்பட்டுள்ளது என்றனர்.