/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்
/
இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்
ADDED : அக் 11, 2024 05:37 AM
தேனி: தமிழ்மொழி இலக்கியத்திறனறித்தேர்வு அக்.,19ல் நடக்கிறது. மாவட்டத்தில் இத்தேர்வினை 4464 மாணவர்கள் எழுத உள்ளனர்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இத்தேர்வில் அரசு, உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பங்கேற்றகலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 1500 என ஆண்டிற்கு ரூ. 16,500 என இரு ஆண்டிற்கு ரூ.33 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வு அக்.,19ல் மாவட்டத்தில் 15 மையங்களில் நடக்கிறது என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.