/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டா ரத்து செய்த 5 ஏக்கர் நிலம், தங்கும் விடுதி மீட்பு
/
பட்டா ரத்து செய்த 5 ஏக்கர் நிலம், தங்கும் விடுதி மீட்பு
பட்டா ரத்து செய்த 5 ஏக்கர் நிலம், தங்கும் விடுதி மீட்பு
பட்டா ரத்து செய்த 5 ஏக்கர் நிலம், தங்கும் விடுதி மீட்பு
ADDED : ஆக 15, 2025 02:36 AM

மூணாறு: மூணாறு அருகே சொக்கர்முடியில் நிலப்பட்டா ரத்து செய்த ஐந்து ஏக்கர் நிலம், அதில் உள்ள தங்கும் விடுதியை மீட்டு அரசு போர்டு வைக்கப்பட்டது.
மூணாறு அருகே அதி தீவிர பேரிடர் பகுதி பட்டியலில் உட்படுத்தப்பட்ட சொக்கர்முடி மலையில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, விதிமீறி கட்டுமானங்கள் நடப்பதாக சமீபத்தில் தெரியவந்தது.
அது தொடர்பாக அன்றைய தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் விசாரணையில் ஏராளமானோர் நிலத்தை ஆக்கிரமித்ததாக தெரிந்தது. அதனால் சொக்கர் முடியில் நிலம் வைத்துள்ளவர்கள் ஆவணங்களை ஆஜர்படுத்துமாறு சப் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதுபோன்று அப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் கைவசம் வைத்திருந்தவருக்கு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆறு முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர்படுத்தவில்லை. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை வருவாய்துறையினர் ஆய்வு செய்தபோது பட்டா உட்பட ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது. அதனால் நிலப்பட்டாவை ரத்து செய்து சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆக.8ல் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தேவிகுளம் வருவாய்துறை அதிகாரி ஜிஜித் எம். ராஜ், மூணாறு சிறப்பு தாசில்தார் காயத்ரி தேவி, பைசன்வாலி வி.ஏ.ஓ. முகம்மதுஅஸ்லாம் ஆகியோர் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் ஐந்து ஏக்கர் நிலம், அதில் உள்ள தங்கும் விடுதி ஆகியவற்றை மீட்டு அரசு சார்பில் போர்டு வைத்தனர்.