ADDED : ஏப் 13, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு எஸ்.ஐ. நிஷார் தலைமையில் போலீசார் வழக்கு விசாரணைக்காக செண்டுவாரை எஸ்டேட் சென்று விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் மூணாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மாட்டுபட்டி பகுதியில் ரோட்டின் குறுக்கே ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அது குறித்து கேட்ட போலீசாரை மதுபோதையில் இருந்தவர்கள் தாக்க முயன்றனர்.
அச்சம்பவம் தொடர்பாக அருவிக்காடு எஸ்டேட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார் 32, ஏசையா 46, சூர்யா 23, டானியேல் 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

