ADDED : ஏப் 18, 2025 06:57 AM

சின்னமனூர்: சின்னமனூரில் இருந்து போடி செல்லும் ரோட்டில் மாவட்ட கனிம வள அதிகாரி கிருஷ்ண மோகன் தலைமையில் கனிம வளத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போடி பகுதியில் இருந்து மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை சோதனை செய்ததில் அனுமதியின்றி மண் அள்ளியது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்து சின்னமனூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். எஸ்.ஐ. சுல்தான் பாட்சா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
கடமலைக்குண்டு:- செங்குளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி செங்கல் காளவாசல்களுக்கு மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்துஉதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தங்கம்மாள்புரம்முத்துக்குமார், சத்யா ஆகியோர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். புகாரில் கடமலைக்குண்டு போலீசார் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.