/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழை வேண்டி 5 கிராம மக்கள் கன்னிமார் கோயிலில் பூஜை
/
மழை வேண்டி 5 கிராம மக்கள் கன்னிமார் கோயிலில் பூஜை
ADDED : அக் 09, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : மழை வேண்டி ஆண்டிபட்டி அருகே 5 கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள கன்னிமார் கோயிலில் பூஜை, வழிபாடு செய்தனர்.
மரிக்குண்டு - அம்மச்சியாபுரம் ரோடு அருகே உள்ள கரடு உச்சியில் கன்னிமார் கோயில் உள்ளது. அம்மச்சியாபுரம், மரிக்குண்டு, பந்துவார்பட்டி, குன்னூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மழை வேண்டி கோயிலில் பூஜைகள் செய்தனர். சுவாமியை அழைத்து வருதல், சக்தி கிடா அழைத்து வருதல், பொங்கல் பூஜை பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து மலை அடிவாரத்தில் கன்னிமார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.