/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய கால்நடை வளர்ச்சி திட்டத்தில் ஆடு, கோழி வளர்க்க 50 சதவீத மானியம் ஆடு, கோழி வளர்க்க 50 சதவீத மானியம்

ADDED : ஜூலை 01, 2025 03:17 AM
கம்பம்: மத்திய அரசின் என்.எல்.எம் எனும் தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தில் ஆடு, கோழி வளர்க்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறவும், கால்நடைகள் உற்பத்தியை பெருக்கவும் தேசிய கால்நடை வளர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கவும், மாட்டு பண்ணை வைக்கவும், கால்நடை தீவனம் வளர்ப்பு, கால்நடை தீவனம் பேக்கிங், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருள்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு 50 சதவீத ரொக்க மானியம் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
உதாரணமாக ரூ.1 கோடிக்கு ஆடு வளர்க்க நீங்கள் விண்ணப்பித்தால், உங்களுக்கு 50 சதவீத மானியம் அதாவது ரூ.50 லட்சம் மானியமாக தரப்படும். இதற்கென ஆன்லைனில் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கிருந்து மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஒப்புதல் வழங்கிய பின், உங்களது விண்ணப்பம் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்து திட்டத்திற்கு அனுமதி தருவார்கள். விரும்பும் விவசாயிகள் கால்நடை பராமரிப்பு துறை அல்லது கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.