/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் கன்றுகள்
/
தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் கன்றுகள்
தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் கன்றுகள்
தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் கன்றுகள்
ADDED : ஜூலை 13, 2025 12:28 AM
கம்பம்,: தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க தென்னங்கன்றுகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க தோட்டக்கலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 22 ஆயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர வருவாய் கிடைக்க கூடியது. பெரிய அளவில் பராமரிப்பு செலவுகள் இருக்காது. எனவே விவசாயிகள் தென்னை சாகுபடியை விரும்பி செய்கின்றனர். கேரள வாடல், சிகப்பு கூண் வண்டு, காண்டா மிருக வண்டு தாக்குதல் விவசாயிகள் கனிசமாக தென்னை சாகுபடியை கைவிட்டனர்.
எனவே தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், ' மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களிலும் தென்னை சாகுபடி செய்துள்ள தோட்டங்களை கள ஆய்வு செய்து, நோய் தாக்கியிருந்தால் ஆலோசனைகள் வழங்குகிறோம். பரப்பை அதிகரிக்க தென்னங் கன்றுகளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். நெட்டை கன்று விலை ரூ.65, நெட்டை குட்டை கன்றின் விலை ரூ.125 ஆகும். 50 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு ஒன்று முதல் இரண்டு எக்டேருக்கு வழங்கப்படும். ஒரு எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியமாக கிடைக்கும். விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்,' என்றனர்.