ADDED : மார் 29, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சென்னை பெருங்குடி 3வது குறுக்குத்தெரு சுரேஷ் 35. மாமனார் ஊரான தேனிக்கு மார்ச் 26ல் டிராவல்ஸ் பஸ்சில் மனைவி குழந்தைகளுடன் வந்தார்.
பஸ் ஏறும் போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் 2 சூட்கேஸ் வைத்ததாகவும் இதில் ஒரு சூட் கேஸ் காணாமல் போனது. சூட்கேசில் 50 பவுன் தங்க நகைகள், கைகடிகாரம், விலை உயர்ந்த துணிகள் இருந்தது என தெரிவித்துபோலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.