/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு அலுவலர்கள் 501 பேர் 'ஆப்சென்ட்'
/
அரசு அலுவலர்கள் 501 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : பிப் 16, 2024 06:23 AM

தேனி,: மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் என 501 பேர் நேற்று விடுப்பு எடுத்தனர். கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிலர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நேற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் விடுப்பு எடுப்பு போராட்டம் , கலெக்டர் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் மாவட்ட அளவில் 435 பேர் சிறு விடுப்பு எடுத்திருந்தனர். கல்வித்துறையில் 66 பேர், கருவூலத்துறையில் 10 பேர் என 76 பேர் சிறுவிடுப்பு எடுக்காமலே விடுப்பில் சென்றனர். மாவட்டத்தில் மொத்தம் 501 அரசு அலுவலர்கள் விடுப்பு எடுத்திருந்தனர். ஆர்ப்பாடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் ராஜன், மாவட்ட செயலாளர் சரவணமுத்து, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணைச் செயலாளர் முகமது ஆசிக், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மீரான் மைதீன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கமீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.