sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.5.37 கோடியில் கட்டிய வாழை சிப்பம் கட்டும் மையம் முடக்கம் சின்னமனுாரில் வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு

/

ரூ.5.37 கோடியில் கட்டிய வாழை சிப்பம் கட்டும் மையம் முடக்கம் சின்னமனுாரில் வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ரூ.5.37 கோடியில் கட்டிய வாழை சிப்பம் கட்டும் மையம் முடக்கம் சின்னமனுாரில் வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ரூ.5.37 கோடியில் கட்டிய வாழை சிப்பம் கட்டும் மையம் முடக்கம் சின்னமனுாரில் வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு


ADDED : மார் 03, 2024 06:15 AM

Google News

ADDED : மார் 03, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார்: சின்னமனூரில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை சிப்பம் கட்டும் மையம் இரு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. விவசாயிகள் குளிர்பதன கிட்டங்கு, இருப்பு வைத்து விற்க வசதியின்றி தவித்து வருகின்றனர்.

தேனி தோட்டக்கலை மாவட்டம் என்பதால் காய்கறிகள், வாழை, திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடியாகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் வாழை சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஜி 9, செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன் உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடியாகிறது. இவை உள்ளூர் மட்டுமின்றி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் இங்கிருந்து வாழைப் பழங்கள் அனுப்பப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்கள் வழியாக ஜி 9, செவ்வாழை ரகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

வாழை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சாகுபடி, மகசூல் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மேம்படுத்த

2019 --2020 ல் தேசிய தோட்டக் கலை இயக்கம் சார்பில் சின்னமனூரில் ரூ.5 கோடியே 37 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வாழை சிப்பம் கட்டும் மையத்திற்கு அனுமதி வழங்கினர். ஆயிரம் ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்ட இம் மையத்தில் 40 டன் வாழை பதப்படுத்தும் கொள்ளளவு கொண்ட கட்டடம், 125 டன் கொள்ளளவு குளிர்பதன கிட்டங்கிகள் கட்டப்பட்டன. இதன் கட்டுமான பணிகள் 2021 ல் நிறைவடைந்தது. ஆனால் இதுவரை விவசாயிகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டியே உள்ளது. -

பணிகள் முடிவு பெற்ற பின்பும், பயன்பாட்டிற்கு கொண்டு வராததற்கு அதிருப்தி தெரிவித்தனர். அதன் பின்னும் பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிட்டங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் குளிர் பதன கிடங்கியில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்து வருகிறது.

குழுவிடம் ஒப்படையுங்கள்


நாராயணசாமி, விவசாயிகள் சங்க தலைவர், சீப்பாலக்கோட்டை : வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை சிப்பம் கட்டும் மையம் பணி முடிந்தும் இரு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி என்ற பெயரில் வாழை விவசாயிகள் ஒருங்கிணைந்து குழு துவக்கி உள்ளனர். இம் மையத்தை உரிய வழிகாட்டுதலில் அவர்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளுக்கு பயன்படும். பயன்பாட்டிற்கு கொண்டு வராததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி வேளாண் அமைச்சரிடம் எங்கள் அமைப்பின் சார்பில் மனு கொடுத்துள்ளோம்.

குளிர்பதன கிடங்கு இன்றி சிரமம்


செல்வக்குமார், முன்னோடி வாழை விவசாயி , எரசக்கநாயக்கனூர் :

வாழையை சுத்தப்படுத்தி கிரேடிங், பேக்கிங் செய்ய பதப்படுத்தும் மையமும், இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட மையம் அமைத்து பூட்டி வைத்துள்ளனர். அதிகாரிகள் ஆண்டு கணக்கில் காரணம் கூறுகின்றனர். இம் மையம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராததற்கு அதிகாரிகளின் கவனக் குறைவே காரணமாகும். இந்த வசதிகள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ள பதப்படுத்தும் மையம் மற்றும் குளிர்பதன கிட்டங்கியையும் திறந்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றங்களுக்கு பரிந்துரை பதப்படுத்தும் மையத்தின் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ராஜமுருகன் கூறுகையில், அபேடா அமைப்பின் அதிகாரிகள் குழு சமீபத்தில் பதப்படுத்தும் மையத்தை ஆய்வு நடத்தினார்கள். செய்ய பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரைகளை நிறைவேற்றும் பணிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் 'அபேடா'வின் அங்கீகாரம் பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றார்.

தீர்வு பயன்பாட்டிற்கு வரவேண்டும்


டில்லியில் உள்ள 'அபேடா' (Agriculture Proccsssed Food Producds Export Development Authority) என்ற மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பின் அங்கீகாரம் தேவை.

இந்த அமைப்பு அனுமதி தந்தால் மட்டுமே இந்த மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அபேடா வின் அங்கீகாரத்தை பெற மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவதுடன் வாழை ஏற்றுமதி அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us