/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
7 பணியிடங்களுக்கு 3956 விண்ணப்பங்கள் ஒரு பணியிடத்திற்கு 500 பேர் போட்டி
/
7 பணியிடங்களுக்கு 3956 விண்ணப்பங்கள் ஒரு பணியிடத்திற்கு 500 பேர் போட்டி
7 பணியிடங்களுக்கு 3956 விண்ணப்பங்கள் ஒரு பணியிடத்திற்கு 500 பேர் போட்டி
7 பணியிடங்களுக்கு 3956 விண்ணப்பங்கள் ஒரு பணியிடத்திற்கு 500 பேர் போட்டி
ADDED : அக் 15, 2025 12:18 AM

தேனி : மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கு 3956 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.
ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், இரவு காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு செப்.,30க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெரியகுளம், மயிலாடும்பாறை, சின்னமனுார், தேனி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 4 அலுவலக உதவியாளர், 2 பதிவுறு எழுத்தர், ஒரு இரவு காவலாளி ஆகிய 7 பணியிடங்கள் அறிவிப்பு வெளியானது. இந்த 7 பணியிடங்களுக்கு 3956 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைக்காதவர்கள், விண்ணப்பக்கட்டணம் செலுத்தாதவர்கள் என சுமார் 400 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 3500 பேருக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்க கடிதம் அனுப்பபட்டது. நேற்று தேனி ஒன்றிய அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேனி பி.டி.ஓ.,முருகேஸ்வரி தலைமையில் நடந்தது.
நேர்முகத்தேர்வு அக்., 17 வரை நடக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தகுதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படித்தவர்களும் பங்கேற்றிருந்தனர். ஒரு பணியிடத்திற்கு சுமார் 500 பேர் போட்டியிடும் நிலை உள்ளது.