ADDED : அக் 15, 2025 12:19 AM
ஆண்டிபட்டி: பனை மரத்தின் முக்கியத்துவம் கருதி பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தன்னார்வ அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு துறைகளுடன் இணைந்து பனை விதைகள் நடவு செய்யும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் 6.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியாக பனை விதைகள் நடவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைகை அணையில் நேற்று நடந்த பனை விதைகள் நடவு பணிகளை தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ.,மகாலட்சுமி, வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன், பசுமை பங்காளிகள் அமைப்பு நிறுவனர் முருகன், போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளிகளின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உட்பட பலர் பனை விதைகளை நடவு செய்தனர்.