ADDED : ஜன 17, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக், தனியார் மதுபார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பலர் சட்டவிரோதமாக சில்லரை மதுவிற்பனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தேனி, தென்கரை, கடமலைக்குண்டு, ராயப்பன்பட்டி உள்ளிட்ட 25 போலீஸ் ஸ்டேஷன்களில் 63 வழக்குகளில் 58 பேர் கைதாகினர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1719 மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.