/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரி வசூலில் இலக்கை எட்டிய 6 நகராட்சிகள் மானியம் பெற தகுதி
/
வரி வசூலில் இலக்கை எட்டிய 6 நகராட்சிகள் மானியம் பெற தகுதி
வரி வசூலில் இலக்கை எட்டிய 6 நகராட்சிகள் மானியம் பெற தகுதி
வரி வசூலில் இலக்கை எட்டிய 6 நகராட்சிகள் மானியம் பெற தகுதி
ADDED : ஏப் 04, 2025 05:36 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளும் கடந்த நிதியாண்டில் வரி வசூலில் 100 சதவீத இலக்கை எட்டியதால் மத்திய அரசின் மானியம் பெற தகுதி பெற்றன.
அனைத்து நகராட்சியிலும் சொத்து வரி, தொழில்வரி, பாதாளசாக்கடை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது.
நகராட்சிகளில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மார்ச் 31க்குள் வரியினங்களை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனை கமிஷனர்கள் தலைமையில் வருவாய் பிரிவினர் வசூலிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் நகராட்சிகளில் 2024-2025ம் நிதியாண்டில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டன.
இதன்படி நிதியாண்டிற்குள் வசூல் செய்தன.
இது பற்றி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகராட்சிகள் வரி வசூல் இலக்கை எட்டினால், மத்திய நிதிக்குழுவின் மானியம் கிடைக்கும்.
மாவட்டத்தில் 6 நகராட்சிகளும் தற்போது மானியம் பெற தகுதி பெற்றுள்ளன.
நகராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கு, மக்கட்தொகை உள்ளிட்டவை அடிப்படையாக மானியம் வழங்கப்படும்,' என்றார்.

