ADDED : செப் 13, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ்வடகரை அழகர்சாமிபுரம் கல்லாறு ரோட்டில் எஸ்.ஐ., ஜான் செல்லதுரை தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆண்டிபட்டி தாலுகா முத்தனம்பட்டி சஞ்சய் 21, என்பவரை விசாரித்தனர். உடமைகளை சோதனை செய்த போது 600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. விசாரணையில், தனது நண்பர்கள் பெரியகுளம் நிஷாந்த், அரப்படிதேவன்பட்டி மனோஜ்குமார் ஆகியோருடன் இணைந்து வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கியதாகவும், போதைக்காக பயன்படுத்தியும், பிறருக்கு விற்பனை செய்து வந்ததாகவும் போலீசாரிடம் சஞ்சய் தெரிவித்தார். சஞ்சயை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரை பெரியகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
