/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்துக்களில் இறந்த 69 நாய்கள் அடக்கம்
/
விபத்துக்களில் இறந்த 69 நாய்கள் அடக்கம்
ADDED : ஏப் 13, 2025 07:15 AM
தேனி : எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமார், ரோட்டின் ஓரங்களில் விபத்தில் சிக்கி இறந்த 69 நாய்களை புதைத்து அடக்கம் செய்து வருகிறார் .
ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்துார் அருகே நாய் ஒன்று விபத்தில் அடிபட்டு துர்நாற்றத்துடன் கிடந்தது. அவ்வழியாக சென்ற ரஞ்சித்குமார், இறந்த நாயை குழிதோண்டி புதைத்தார்.
பொது மக்களுக்கு ரேபிஸ் தொற்று நோய் பரவாத வகையில் இவ்வாறு செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டத்தில் பல ரோடுகளில் விபத்தால் இறந்த 69 நாய்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது,'நாய்கள் விபத்தில் இறந்தால் உடனே உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை அகற்ற வேண்டும். பலர் கண்டு கொள்வது இல்லை. உடனே புதைப்பதால் பொது மக்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கப்படும்,' என்றார்.

