/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 700 காளைகளுக்கு அனுமதி பாதுப்பு பணியில் 697 போலீசார் குவிப்பு

ADDED : பிப் 18, 2024 01:32 AM
தேனி: அய்யம்பட்டியில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் கிராம கமிட்டியினர் கோரிக்கையை ஏற்கப்பட்டு 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சின்னமனுார் அருகே அய்யம்பட்டி வல்லடிக்காரன் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இதற்காக ஆன்லைன் பதிவு பிப்.,12 முதல் 14 வரை நடந்தது. அதிக அளவிலான வீரர்கள், காளைகள் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் காளைகள், வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மற்றும் உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என அதிருப்தி ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கிராம கமிட்டி குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் செய்யப்படலாம் என பேச்சு எழுந்தது.
இந்நிலையில் கிராமகமிட்டியினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த காளைகளும் பங்கேற்கும் வகையில் 700 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 400 காளையர்கள் பங்கேற்ற உள்ளனர்.
கலெக்டர் ஷஜீவனா காலை 7:00 மணிக்கு ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறார். பாதுகாப்பு பணியில் இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 8 டி.எஸ்.பி.,க்கள், 19 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 697 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இது தவிர 12 டாக்டர்களை கொண்ட 7 ஆம்புலன்ஸ், ஏழு மருத்துவக்குழுவினர் பணியில் ஈடுபட தயார் நிலையில் இருப்பார்கள்.