/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 மாடுகள் பிடிப்பு
/
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 மாடுகள் பிடிப்பு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 மாடுகள் பிடிப்பு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 மாடுகள் பிடிப்பு
ADDED : ஆக 06, 2025 08:05 AM

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் ரோட்டில் சுற்றி திரிந்த மாடுகளால் இடையூறு ஏற்படுவதை தடுக்க 7 மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.
பெரியகுளம் நகராட்சி மார்க்கெட் தெரு, தண்டுப்பாளையம், மூன்றாந்தல்,- கம்பம் ரோடு, தெற்கு தெரு, புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதி ரோடுகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. மாடு வளர்ப்பவர்கள் பாலை கறந்து விட்டு தீவனம் கொடுக்காமல் மேய்சலுக்கு ரோட்டில் அவிழ்த்து விடுகின்றனர். இந்த மாடுகள் டூவீலரில் செல்பவர்களை முட்டியும், மிரண்டு ஓடி மக்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
மாடுகளை பிடிக்க பொதுநல அமைப்புகள் நகராட்சியில் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கமிஷனர் தமீஹா சுல்தானா மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார்.
சுகாதார ஆய்வாளர் அசன்முகமது மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று ஒரே நாளில் 7 மாடுகளை பிடித்தனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து தீவனம் கொடுக்கப்பட்டது.
அபராதம்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 2023 விதிகள் படி, முதல் விதியை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம், இரண்டாவது ரூ.5 ஆயிரம் அபாதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் 48 மணி நேரத்தில் உரிமை கோராதபட்சத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய நகராட்சி தயாராகியுள்ளது. இன்றும் மாடு பிடிப்பது தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.