/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் குறுவட்ட விளையாட்டு போட்டி: 29 பள்ளிகள் பங்கேற்பு
/
கம்பம் குறுவட்ட விளையாட்டு போட்டி: 29 பள்ளிகள் பங்கேற்பு
கம்பம் குறுவட்ட விளையாட்டு போட்டி: 29 பள்ளிகள் பங்கேற்பு
கம்பம் குறுவட்ட விளையாட்டு போட்டி: 29 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஆக 06, 2025 08:03 AM

கம்பம் : கம்பம் குறுவட்ட பாரதியார் விளையாட்டு போட்டியில் தடகள போட்டி நேற்று கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 29 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
கம்பம் குறுவட்ட போட்டிகளை எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளி ஏற்று நடத்துகிறது. நேற்று நடைபெற்ற தடகள போட்டிகள் துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் மகுட காந்தன் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்த வாசன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் வனிதா, சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், நிர்வாக குழு உறுப்பினர் குகன், முன்னாள் நகராட்சி தலைவர் இளங்கோவன், முன்னோடி ஏல விவசாயி சக்தி சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தடகள போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றது. குண்டு எறிதலில் கம்பம் எம்.பி.எம். பள்ளி முதலிடத்தையும், சி.பி.யூ. பள்ளி இரண்டாம் இடத்தையும், தட்டு எறிதலில் எம்.பி.எம். பள்ளி முதல் இடத்தையும், சி.பி.யூ. பள்ளி இரண்டாம் இடத்தையும், நீளம் தாண்டுதலில் கூடலூர் என்.எஸ்.கே.பி. பள்ளி முதல் இரண்டு இடங்களை பிடித்தது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.