/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் பஸ் - ஜீப் மோதல் தொழிலாளர்கள் 7 பேர் காயம்
/
தனியார் பஸ் - ஜீப் மோதல் தொழிலாளர்கள் 7 பேர் காயம்
தனியார் பஸ் - ஜீப் மோதல் தொழிலாளர்கள் 7 பேர் காயம்
தனியார் பஸ் - ஜீப் மோதல் தொழிலாளர்கள் 7 பேர் காயம்
UPDATED : ஜூலை 22, 2025 11:45 AM
ADDED : ஜூலை 22, 2025 04:21 AM
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மீது தனியார் பஸ் மோதியதில் பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
நேற்று காலை கூடலுாரில் இருந்து கேரள ஏலத்தோட்ட வேலைக்காக தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு குமுளி மலைப்பாதையில் ஜீப் சென்றது. எஸ் வளைவு அருகே எதிரே குமுளியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் ஜீப் டிரைவர் குணசேகரன், தோட்டத் தொழிலாளர்கள் முத்தம்மாள், சுகந்தி, செல்வா, சாரா, ஜெயசீலி, போதுமணி ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பஸ் டிரைவர் பிரதாப் மீது வழக்கு பதிவு செய்து லோயர்கேம்ப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.