/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் 75 பேர் கைது
/
மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் 75 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் 75 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் 75 பேர் கைது
ADDED : நவ 08, 2024 04:51 AM

தேனி: தேனியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன்கடை பணியாளர்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, பொட்டலமுறையில் பொருட்கள் வழங்க வேண்டும். பணியாளர் வசிக்கும் பகுதியில் பணியிட மாற்றம் உள்ளிட்ட 35 கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட சிறப்பு தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் அய்யனார், அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் பாண்டி, அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் காமாட்சி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் 18 பெண் பணியாளர்கள் உட்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் என மொத்தம் 542 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 362 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
மறியல் போராட்டத்தால் 120 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் 132 கடைகள் செயல்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வினியோகம் சில இடங்களில் பாதிக்கப்பட்டது.