/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ரூ.7.75 லட்சம் நகை கொள்ளை
/
தேனியில் ரூ.7.75 லட்சம் நகை கொள்ளை
ADDED : ஜன 13, 2024 01:29 AM

தேனி:தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி தனியார் மில் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7.75 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை அல்லிநகரம் போலீசார் தேடி வருகின்றனர்.
பொம்மையக்கவுண்டன்பட்டி பஜார் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் ௩௦, மனைவி ரஞ்சிதா 26, மற்றும் குடும்பத்தினருடன் ஜன.,11ல் பழநி முருகன் கோயிலுக்கு சென்றார். அவர்களுடன் சென்ற ரஞ்சித்குமாரின் மைத்துனர் பிரேம்குமார் மட்டும் தரிசனம் முடித்து அன்றிரவு 12:00 மணிக்கு பழநியில் இருந்து தேனிக்கு வந்தார். மறுநாள் அதிகாலை ரஞ்சித் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பழநியில் இருந்த ரஞ்சித் குமாரிடம் தெரிவித்தார்.
ரஞ்சித்குமார் வந்து பார்த்த போது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டும், வாசல் கதவு சேதப்படுத்தப்பட்டும் இருந்தது. பீரோவில் இருந்த ரூ.6.60 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.1.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
ரஞ்சித்குமார் போலீசார் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.