/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுமாடை வேட்டையாடி இறைச்சி பங்கிட்ட 8 பேர் கைது
/
காட்டுமாடை வேட்டையாடி இறைச்சி பங்கிட்ட 8 பேர் கைது
காட்டுமாடை வேட்டையாடி இறைச்சி பங்கிட்ட 8 பேர் கைது
காட்டுமாடை வேட்டையாடி இறைச்சி பங்கிட்ட 8 பேர் கைது
ADDED : பிப் 12, 2025 01:47 AM

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் காட்டுமாடை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்ட சிறுவன் உட்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி வனச்சரகம் வாலாட்டி பகுதி புலிஓடையில் காட்டுமாடு தலை, உடலின் பாகங்கள் சிதறி கிடந்தது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
வேட்டையில் ஈடுபட்டவர்களை ரேஞ்சர் அன்பழகன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். பெரியகுளம் தெய்வேந்திபுரம் நாகராஜ் 24, வடகரை பட்டாபுளி தெரு பிரபாகரன் 27, எ.புதுக்கோட்டை வேல்முருகன் 34, எண்டப்புளியைச் சேர்ந்த ஆண்டவர் 46, முருகமலை நகர் சுரேஷ் 39, தேனி கோட்டைப்பட்டி சுந்தரம் 45, ராஜபாண்டி 29 மற்றும் பெரியகுளம் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய 8 பேர் காட்டுமாடை வேட்டையாடி அதன் இறைச்சியை பங்கு போட்டுள்ளது தெரிந்தது.
அனைவரும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அந்தப்பகுதியில் கிடந்த காட்டுமாடு தலை, எலும்பு, புதைக்கப்பட்ட குடல் பகுதிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரேஞ்சர் அன்பழகன் கூறுகையில் ''7 வயது ஆண் காட்டுமாடை வேட்டைநாயை விட்டு விரட்டி, பள்ளத்து பகுதியில் விழ வைத்துள்ளனர்.
பின்னர் வேல் கம்புகளை வீசி மாடை கொலை செய்தனர்.
90 முதல் 100 கிலோ எடையுள்ள அதன் இறைச்சியை பங்கு போட்டுள்ளனர்'' என்றார்.

